காரியமங்கலம்: காரிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவில்: கொலு மண்டபம் புனரமைக்கக்கோரி விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் கொலு மண்டபத்தை புனரமைக்க அனுமதி கோரி, விசுவ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்க வலியுறுத்தி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.