அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கூடுதலாக 20 படுக்கை வசதிகள்
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு பிரிவில் கூடுதலாக 20 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.