செங்கம்: செங்கம் அருகே மூதாட்டி மீது இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து!
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் காவல் சோதனை சாவடி அருகே, இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் மூதாட்டி ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.