பாலக்கோடு: பாலக்கோடு மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்: முதியவர் பலி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மேம்பாலத்தில் டயர் வெடித்து கார் கீழே விழுந்த விபத்தில், முதியவர் பாஸ்கரன் உயிரிழந்தார். மகன் சக்திவேல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புலிகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.