திருப்பத்தூர்: விவசாய நிலத்தில் உலா வந்த மயில்கள் - வைரல் காட்சிகள்!
திருப்பத்தூர் மாவட்டம், லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் மற்றும் மாந்தோப்பில் இரண்டு மயில்கள் உலா வந்தன. இந்த அழகிய காட்சியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இயற்கை மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.