சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பொன்னேரி குளத்தில் 2000 பனை விதைகள் நடும் பணி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அப்துல் கலாம் நண்பர்கள் குழு மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து பொன்னேரி குளக்கரையில் 2000 பனை விதைகளை நட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குவதே இதன் நோக்கம்.