கோவை வடக்கு: கோவையில் வன எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சூரிய சக்தி வேலி அகற்றம்
கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் மற்றும் பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் வன எல்லையை ஒட்டி தனியார் நிறுவனம் அமைத்திருந்த 3 கி.மீ நீள சூரிய சக்தி வேலியை வனத்துறையினர் அதிரடியாக அகற்றினர். உரிய அனுமதியின்றி வன எல்லையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த வேலி அமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.