நாட்றாம்பள்ளி: நாட்றம்பள்ளி: 13 நாட்களாக வீணாகும் காவிரி குடிநீர் - அவதிப்படும் வாகன ஓட்டிகள்
நாட்றம்பள்ளி அருகே காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், 13 நாட்களாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.