திருநெல்வேலி: தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.