திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய 3 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டரை கம்பியால் தாக்கிய 3 ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெர்மிட் தொடர்பான வாக்குவாதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்த ஸ்டேஷன் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.