பரமத்தி வேலூர்: பட்டாசு தயாரித்த வீடு வெடித்து சிதறியதில் 3 பேர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் ராஜசேகரன், சத்யா, பொன்மலர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். வீட்டின் மேல்மாடி தரைமட்டமான இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.