நாகப்பட்டினம்: அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் நூதன போராட்டம்: கோரிக்கைகள் என்ன?
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் செப்டம்பர் 30-ம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.