அரியலூர்: துக்கம் விசாரிக்கச் சென்ற வாகனம் விபத்து - 17 பேர் படுகாயம்
அரியலூர் மாவட்டம் சாலைகுறிச்சி அருகே துக்கம் விசாரிக்கச் சென்ற டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்ததில் 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.