இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அதிரடி நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மீனவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.