பெரம்பலூர்: குரூப்-1 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் - ஆட்சியர் ஆய்வு!
பெரம்பலூரில் வரும் 27.09.2026 அன்று நடைபெறவுள்ள குரூப்-1 தேர்வை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் 2,550 பேர் தேர்வு எழுத உள்ளனர்.