திருப்பத்தூர்: கந்திலி: பாலத்தில் அமர்ந்து மது அருந்திய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே சிறிய பாலத்தில் அமர்ந்து மது அருந்திய நபர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் பர்கூரை சேர்ந்த ஆறுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.