உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கோம்பையில் பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி 300-க்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டம்
தேனி மாவட்டம் கோம்பையில் 2.40 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு, 216 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாபெரும் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.