தென்காசி: வாட்ஸ்அப் மெசேஜ்-ல் தற்கொலை மிரட்டல்: உயிருடன் மீட்ட அதிரடி போலீஸ்!
விருப்பமான பாடம் கிடைக்காத விரக்தியில் மலை உச்சியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற பிளஸ் டூ மாணவியை, வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் கிடைத்த தகவலையடுத்து, கேரள போலீசார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர். ஒரு உயிரைக் காத்த போலீசாரின் துரிதச் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.