செங்கம்: திருவண்ணாமலை: வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் வைக்கோல் போருக்குள் மறைத்து வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை பாய்ச்சல் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.