உடையார்பாளையம்: அரியலூர்: மரத்தில் தொங்கிய முதியவரை காப்பாற்றிய காவலர் - டிஜிபி பாராட்டு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மழையில் மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரை, துரிதமாகச் செயல்பட்டு உயிர் காப்பாற்றிய ஜெயங்கொண்டம் தலைமைக் காவலர் மூன் பிரிட்ஜ் அவர்களை டிஜிபி டாக்டர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.