ஆம்பூர்: ஆம்பூர் பாலாற்றில் கொட்டப்படும் தோல் கழிவுகள் - புகைமூட்டத்தால் மக்கள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பாலாற்றில் தோல் கழிவுகளை கொட்டி மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் புகைமூட்டத்தால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.