ராதாபுரம்: கூடங்குளம் அருகே மீனவர் சரமாரியாக குத்திக் கொலை: சக மீனவர் கைது
நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் முன்விரோதம் காரணமாக லாரன்ஸ் என்ற நபர், அனிஷ் என்ற மீனவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்ஸை கைது செய்தனர்.