தேனி: தேனி 4-வது வார்டில் குப்பை மற்றும் கழிவுநீர் பிரச்சனை: ஆபத்தான நிலையில் மின் வயர்கள்
Theni, Theni | Sep 29, 2026 தேனி அல்லிநகரம் 4-வது வார்டில் 10 நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், குப்பைகள் குவிந்து கிடப்பதாலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் மின் வயர்கள் தொங்குவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.