செங்கம்: திருவண்ணாமலை: இடி, மின்னல் தாக்கி கறவை மாடு பலி - பிஞ்சூர் கிராமத்தில் சோகம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பிஞ்சூர் கிராமத்தில், நேற்று இரவு பெய்த கனமழையின் போது இடி, மின்னல் தாக்கி கறவை மாடு ஒன்று உயிரிழந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர் ரஞ்சிதா-புகழேந்தி தம்பதியரின் மாடு பலியானதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.