பாலக்கோடு: மீண்டும் வீட்டிற்குள் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை - சிசிடிவி காட்சி
பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் விநாயகம் என்பவரது வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை சேவலை கவ்விச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அதனை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.