காட்பாடி: வேலூரில் தீவிரமடையும் டெங்கு ஒழிப்பு பணிகள் - மாநகராட்சி ஆணையர் தகவல்
வேலூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கேத்தரின் சரண்யா விளக்கம் அளித்துள்ளார். நகரில் 40 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு மழைநீர் தேங்காதவாறு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.