ஆண்டிமடம்: அரியலூர்: தாமரை பறிக்க ஏரிக்குச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் அழகாபுரம் ஏரியில் தாமரை பறிக்கச் சென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.