பெரம்பலூர்: பெரம்பலூரில் தேர்தல் ஆணையருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களை மறு ஆய்வு செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.