பெரம்பலூர்: பெரம்பலூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு!
பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வை 2,550 விண்ணப்பதாரர்கள் எழுதினர். தேர்வு மையங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய 27 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.