திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: தொகுதி-1 முதல்நிலைத் தேர்வு - 4,232 பேர் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தொகுதி-1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், விண்ணப்பித்தவர்களில் 75 சதவீத தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். மொத்தம் 19 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.