கிண்டி: அமுதம் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்!
வெளிச்சந்தையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கிலோ ரூ.35-க்கு வெங்காயம் வழங்கும் திட்டம் அறிவித்தது. ஆனால், அமுதம் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் இதுவரை கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்பிரச்சனைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.