பாளையங்கோட்டை: திருநெல்வேலி: போக்சோ வழக்கில் ஜாமீன் ரத்து - தலைமறைவாக இருந்த நபர் கைது!
திருநெல்வேலியில் போக்சோ வழக்கில் ஜாமீனில் இருந்த நபர், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால் பிணை ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பட்டுராஜை மாவட்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.