காட்பாடி: வேலூர்: கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் காலில் விழுந்து பெண் கதறல் - என்ன காரணம்?
வேலூர் மாவட்டம் சேவூர் கிராம சபை கூட்டத்தில், தனது பன்றி வளர்ப்புத் தொழிலை ஊராட்சி மன்ற தலைவர் தடுக்கக் கூடாது என கோரி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்தார். வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.