குஜிலியம்பாறை: திண்டுக்கல்: குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த கோவிலூர் செல்லக்குட்டி ஊரில் ஒரு மாதமாக குடிநீர் வராததால், காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.