விளவங்கோடு: கன்னியாகுமரி: சாலையில் அந்தரத்தில் தொங்கும் மரம் - அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு மாலை கோடு சாலையில் ஆற்று பாலம் அருகே மரம் ஒன்று ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.