கீழ்வேளூர்: நாகை தேவூர் தேவபுரீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பரிகார பூஜைகள்!
நாகை அருகே உள்ள தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி மற்றும் நட்சத்திர தோஷங்களுக்கான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.