எடப்பாடி: அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!
Edappadi, Salem | Sep 29, 2026 சேலம் மாவட்டம் கச்சுப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியை மழைநீர் சூழ்ந்ததால், பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கொங்கணாபுரம்-ஓமலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.