ஆண்டிப்பட்டி: மேகமலை ஆக்கிரமிப்பு: 4-வது நாளாக தொடரும் மலை கிராம மக்களின் காத்திருப்பு போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில், தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் 5000க்கும் மேற்பட்டோர் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.