வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் கழிவுகளை சுமக்கும் சக்கர நாற்காலி: வைரலாகும் வீடியோ!
வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான சக்கர நாற்காலியில் கழிவு பொருட்களை ஊழியர் எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.