ஆம்பூர்: வடபுதுப்பட்டு, நரியம்பட்டு பகுதிகளில் காவல்துறை சிறப்பு நடை ரோந்து
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கிராம விழிப்புணர்வு கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.