திருவண்ணாமலை: போளூர் அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
போளூர் அருகே கஸ்தம்பாடி ஊராட்சியில் விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் செல்வமணி மற்றும் ரவீந்திரன் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் காயங்களுடன் தப்பினார். களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.